15 ஆண்டுக்கு மேற்பட்ட லாரிகள் எப்.சி. பெற பழைய கட்டணம் வசூலிக்க கோரிக்கை

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு, எப்.சி சான்றிதழ் பெறுவதற்கு பழைய கட்டண முறையையே தொடர கோரிக்கை.

Update: 2022-05-26 11:15 GMT

பைல் படம்.

தமிழ்நாடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமையில் அதன் நிர்வாகிகள் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் புதுப்பிக்க (எப்சி) கட்டணம் ரூ. 800 ஆக இருந்தது. 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் இதை ரூ. 13 ஆயிரத்து 780 ஆக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை கைவிட்டு, மீண்டும் பழைய கட்டண முறையையே தொடர வேண்டும், எப்.சி பெற செல்லும்போது, ஆர்டிஓ அலுவலகங்களில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் 3எம் ஸ்டிக்கர்களை மட்டுமே வாகனங்களில் ஒட்டி வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். எனவே மத்திய அரசின் வழிகாட்டுதலை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தி எந்த கம்பெனியின் ஸ்டிக்கர்களையும் ஒட்டிவர அனுமதிக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள ஆன்லைன் ஃபைன் முறையில், என்ன குற்றம் என்றே தெரியாமல் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே ஆன்லைன்மூலம் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும்.

புதிய வாகனம் வாங்கும்போது தற்காலிக பதிவு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இது, பாடி கட்டுவதற்கு போதுமான கால அவகாசமாக இல்லை. இந்த கால அவகாசத்தை அதே கட்டணத்தில் 3 மாதம் வரை நீட்டிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள அளவுகளை விட கூடுதலாக ஓவர் லோடு ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஆர்டி அலுவலகம் மூலம் கண்காணித்து தடைசெய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News