மோகனூர் அருகே விவசாயிகளுக்கு கரும்பு சோகை மறுசுழற்சி விழிப்புணர்வு

மோகனூர் அருகே விவசாய தோட்டங்களில் கரும்பு சோகை மறுசுழற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-02-14 00:45 GMT

மோகனூர் அருகே விவசாய தோட்டங்களில் கரும்பு சோகை மறுசுழற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரும்பு வயல்களில், சேகை மறுசுழற்சி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூர் கிராமத்தில், விவசாய தோட்டங்களில், கரும்பு சோகையை எரிக்காமல், இயந்திரம் மூலம் துண்டித்து, வயலிலேயே மறுசுழற்சி செய்யும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய தலைவர் ஷர்மிளாபாரதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசும்போது, கரும்பு அறுவடை செய்தபின், வீணாகிய சோகைகளை, ஒன்றாக சேர்த்து எரிப்பதால், கார்பன்-டை -ஆக்சைடு மற்றும் கார்பன்-மோனாக்சைடு நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. இதனால், அருகில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் மற்றும் மண் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே கரும்பு சோகை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றார்.

உதவி பேராசிரியர் சத்யா, கரும்பு சோகைகளை இயந்திரம் மூலம் துண்டித்து, அந்த வயலிலேயே மறுக்கிவிடுவதால், மண் வளத்தில் மாற்றம் ஏற்பட்டு, களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், மண்ணில் ஈரப்பதம் நிலைத்து நிற்கும். மேலும், சோகையை மறுக்கிவிட்டபின், அது நன்றாக மக்கி, அந்த வயலிலேயே எருவாக மாறி, மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது என்றார். உதவி பேராசிரியர் பால்பாண்டி மற்றும் திரளான விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News