நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழா துவக்கம்: நாளை சீதாராம திருக்கல்யயாண உற்சவம்

நாமக்கல்லில் ஸ்ரீ ராம நவமி விழா துவங்கியது. நாளை சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

Update: 2024-04-18 02:45 GMT

நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழாவை முன்னிட்டு, ராமர் படத்திற்கு தீபாராதணை நடைபெற்றது.

நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ் மாருத்யாதி பஜன கான சபாவின் சார்பில் 110ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி உற்சவம், கோட்டை முல்லை மஹாலில் துவங்கியது. விழாவை முன்னிட்டு 17ம் தேதி மாலை, ஸ்ரீ ராமர் திருஉருவப்படம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. பின்னர் தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று 18ம் தேதி காலை அஷ்டபதி, பஜனை நடைபெறும். மாலையில் அஷ்டபதி, திவ்யநாம பஜனை நடைபெற்று, மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். நாளை 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

மாலை 5 மணிக்கு, திவ்யநாமம், வசந்த கேளிக்கை மற்றும் பவளிம்பு உற்சவம் நடைபெறும். திருக்கல்யாண கட்டளைதாரர்களாக கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார் மற்றும் வெங்கடேஷன் பட்டாச்சாரியார் ஆகியோர் பங்கேற்றகின்றனர். 20ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெறும். மோகனூர் பத்மநாபராவ் பாகவதர், சீதராம பாகவதர் மற்றும் குழுவினர் ஸ்ரீ ராமநவமி உற்சவத்தை நடத்தி வைக்கின்றனர்.

Tags:    

Similar News