நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு- கட்டுரை போட்டி

தமிழ்நாடு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு- கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

Update: 2022-07-08 10:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுபோட்டி நடத்தப்பட்டது.

தமிழகத்துக்கு தமிழ்நாடு என, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயர் சூட்டிய, ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட அளவில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும், தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள் உள்ளிட்ட 10 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் 27 பேரும், கட்டுரைப்போட்டியில் 26 பேரும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான நடுவர்களாக ஆசிரியர்கள் சாந்தி, நாராயணமூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News