கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பேச்சுப்போட்டி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

Update: 2022-06-03 13:15 GMT

மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

குறளோவியம் படைத்த குரலோவியம், சமூக நீதி நாயகர் கலைஞர், மாற்றுத் திறனாளி நலன் காத்த கலைஞர் , தமிழகத்தை உருமாற்றிய தலைவர் கலைஞர், திராவிட இயக்கத் தூண் கலைஞர், சட்டமன்ற வரலாற்று நாயகர் கலைஞர், கல்லக்குடி முதல் கோட்டை வரை, இதழியலில் முத்திரை பதித்த இன்றமிழ் அறிஞர் கலைஞர், திரைத்துறையில் புதுமை படைத்த கலைஞர், பெரியாரிய பெருஞ்சாதனையாளர் கலைஞர் உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, முத்தாயம்மாள் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 21 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் ஜோதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி விலங்கியல் துறை தலைவர் சர்மிளா பானு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News