வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரைப் போட்டி

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலப் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது.

Update: 2022-07-27 00:45 GMT

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆண்டுதோறும், தமிழக அரசு சார்பில் வல்வில் ஓரி விழா நடைபெறும், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகிற ஆக.2, 3 தேதிகளில் இரண்டு நாட்கள் வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வல்வில் ஓரியின் சிறப்புகள் என்ற தலைப்பில் பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள், ஒன்றிய அளவில் நடத்தப்பட்டது. அதில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட்டது. பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் தலா, 30 பேர் என, மொத்தம் 60 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓரி விழாவின்பாது, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News