ஆவணி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-08-19 09:30 GMT

ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, மோகனூர் காந்தமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல்-மோகனூர் மெயின் ரோட்டில், பிரசித்திபெற்ற ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும், கிருத்திகை அன்று, சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும். இன்று ஆவணி கிருத்திøயை முன்னிட்டு, காலை 8 மணிக்கு சுவாமிக்கு நல்லöண்ணை, பால், தயிர், திருமஞ்சள், பஞ்சாமிர்தம் போன்ற வாசதனை திரவியங்களால் அபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் "அன்ன தானம் வழங்கப்பட்டது.

* மோகனூரில் உள்ள காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, காலை 11 மணிக்கு சுவாமிக்கு அபிஷகம் நடைபெற்றது. தொடந்து தங்கக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மோகனூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமா பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கூலிப்பட்டி முருகன் கோயில், கபிலர்மலை முருகன் கோயில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆவணி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிசேக ஆராதானைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News