South Zone Yoga Competition அண்ணா பல்கலை சார்பில் தென் மண்டல யோகாபோட்டிகள் துவக்கம்

South Zone Yoga Competition

Update: 2023-12-02 07:15 GMT

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், அண்ணா பல்கலை சார்பில் நடைபெறும், தென்மண்டல யோகாசனப் போட்டிகளை பல்கலை துணைவேந்தர், வேல்ராஜ், கல்லூரி சேர்மன் பெரியசாமி, பொருளாளர் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

South Zone Yoga Competition

சென்னை அண்ணா பல்கலை. சார்பில், தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான யோகாசன போட்டிகள், தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் துவங்கியது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் சார்பில், அகில இந்திய, தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி துவக்கவிழா தொட்டியம், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி சேர்மன் பெரியசாமி, செயலாளர் தங்கவேல், பொருளாளர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் போட்டிகளை துவக்கி வைத்துப் பேசினார். அண்ணாபல்கலை விளையாட்டு வாரியத்தின் தலைவர் சுவாமிநாதன் வரவேற்றார். அண்ணாபல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் துணை இயக்குநர் மற்றும் செயலாளர் பாலகுமாரன், அண்ணாபல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் உடற்கல்வி உதவி இயக்குநர் பாலகணேஷ் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் அகில இந்திய பல்கலைக்கழக தென்மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, தமிழகம் உட்பட மொத்தம் 14 மாநிலங்களில் உள்ள பல்கலைகழங்கலில் இருந்து 103 ஆண்கள் அணிகளும் மற்றும் 115 பெண்கள் அணிகளும் கலந்து கொள்கின்றனர். இதில் அதிக பட்சமாக குஜராத் மாநிலத்திலிருந்து 18 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் குழுக்களும், கர்நாடக மாநிலத்திலிருந்து 16 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் குழுக்களும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 15 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் குழுக்களும், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 13 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் குழுக்களும் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து 10 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் குழுக்களும் கலந்து கொள்கின்றனர்.

வருகிறன்ற 4ம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் யோகா போட்டிகள் நடைபெறும். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு, 4ம் தேதி நடைபெறும், நிறைவு விழாவில் கேடயம் மற்றும் சான்றிதழ் மற்றும் வழங்கப்படும். இப்போட்டியினை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அனைத்து இன்ஜினியரிங் கல்லலூரிகளில் உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் மற்றும் யோகாசன நடுவர்கள் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News