கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு

நாமக்கல் கொண்டிசெட்டிபட்டி ஏரியில் திடீரென்று மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-21 05:00 GMT

நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, கொண்டிசெட்டிப்பட்டியில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையில் அண்ணா நீர்நிலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அதிகாலை வேளையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மாலை நேரத்தில் ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து விளையாடுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஏரியில் உள்ள மீன்கள் திடீரென்று செத்து மிதக்கின்றன. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதையொட்டி, ஏரிப்பகுதிக்கு வருபவர்களுக்கும், அருகில் வசிப்பவர்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறுப்படுத்தி, ஏரியை சுகாதார சீர்கேடு அடையாமல் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News