நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாட்டுக்கன்று குட்டியை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

Update: 2022-06-27 14:30 GMT

நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டுக் கன்றுக்குட்டியை, தீயணைப்புத்துறையினர் கயிறு மூலம் உயிருடன் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகில் உள்ள தளிகை கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி, விவசாயி. அவருக்கு சொந்தமான தோட்டம் வீட்டிற்கு அருகில் உள்ளது. அவர் பசுமாடு வளர்த்து வருகிறார். நேற்று காலை 11 மணியளவில் அவருக்கு சொந்தமான பசுமாட்டின் கன்றுக்குட்டி அந்தப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தது. திடீரென்று காணவில்லை. அவர் சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தார். அப்போது அருகில் உள்ள கிணற்றில் அந்த கன்றுக்குட்டி தவறி விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

அவர் இது குறித்து நாமக்கல் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கயிற்றில் கட்டி, கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு மேலே கொண்டுவந்தனர். தீயணைப்புத்துறைக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News