வட்டார இயக்க மேலாண்மைத்துறையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பணிபுரிய பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Update: 2022-09-20 10:00 GMT

பைல் படம்.

இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் 2 வட்டார இயக்க மேலாளர்கள் (கொல்லிமலை, வெண்ணந்தூர் வட்டாரங்கள்) மற்றும் 7 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (கபிலர்மலை, எருமப்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிபேட்டை, வெண்ணந்தூர் வட்டாரங்கள்) பதவிக்கு பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளனார்.

வட்டார இயக்க மேலாளர் (பிஎம்எம்) தகுதிகள் : ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் எம்.எஸ் ஆபீசில் குறைந்தபட்சம் 6 மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 28-வயதுக்குட்பட்டவராகவும், நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் (பிசி) தகுதிகள்: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் எம்எஸ் ஆபீசில் குறைந்தபட்சம் 6 மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 28-வயதுக்குட்பட்டவராகவும், அந்தந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பத்தினை வருகிற 30ம் தேதிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News