பேட்டப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பேட்டப்பாளையம் முத்து மாரியம்மன் கோயில், கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-06-03 12:00 GMT

மோகனூர் அருகே பேட்டப்பாளையம் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது.

பேட்டப்பாளையம் முத்து மாரியம்மன் கோயில், கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மோகனூர் ஒன்றியம், பேட்டப்பாளையத்தில் ஸ்ரீ மகா கணபதி, முத்துமாரியம்மன், சந்தியப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணி நடைபெற்றறது. இதைத் தொடர்ந்து கும்பாபிசேக விழா கடந்த மே. 30ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து, மகா கணபதி வழிபாடு, முளைப்பாரி அழைத்தல், வாஸ்து சாந்தி, முதல் கால யாக வேள்வி, கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வி மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது.

அதையடுத்து 9 மணிக்கு புனித தீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மகா கணபதி, முத்து மாரியம்மன், சந்தியப்பன் ஆலய கோபுரம் மற்றும் மூலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News