அங்கன்வாடி மையத்தில் அதிகாரிகளை வைத்துப் பூட்டிய அமைப்பாளர் சஸ்பெண்ட்

நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்தில் அதிகாரிகளை வைத்துப் பூட்டிய அமைப்பாளரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார்.

Update: 2022-05-08 05:15 GMT

பைல் படம்.

நாமக்கல் அருகே உள்ள லக்கம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு சசிகலா என்பவர் அமைப்பாளராக சசிகலா பணியாற்றி வந்தார். அந்த மையத்தில், சில ஆண்டுகளாக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அந்த அங்கன்வாடி மையத்திற்கு வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் வித்யாலட்சுமி மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் ஆய்வுக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் அமைப்பாளர் சசிகலா அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருவதாக கூறினார். பின்னர் திடீரென அதிகாரிகளையும், 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் அங்கன்வாடி மையத்தில் வைத்து அமைப்பாளர் சசிகலா, பொதுமக்களுடன் இணைந்து பூட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளா தேவி, அங்கன்வாடி மையத்தில் இருந்த அரசு அலுவலர்கள் மற்றும் குழந்தைகளை மீட்டார். பின்னர் அவர் இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்தார். அவரது அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், அங்கன்வாடி அமைப்பாளர் சசிகலாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News