போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள் நடைபயணம்

வாக்குச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை தலைமச்சுமையாக எடுத்துக்கொண்டு அதிகாரிகள் நடந்து புறப்பட்டனர்.

Update: 2024-04-18 04:00 GMT

நாமக்கல் மாவட்டம், போதமலைக்கு ரோடு வசதி இல்லாததால், அங்குள்ள 2 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை தலைச்சுமையாக அதிகாரிகள் எடுத்துச்செல்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் போதமலைக்கு ரோடு வசதி இல்லாததால், அங்குள்ள 2 ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை தலைமச்சுமையாக எடுத்துக்கொண்டு அதிகாரிகள் நடந்து புறப்பட்டனர்.

நாமக்கல் லோக்சபா தொகுதியில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு,சங்ககிரி உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. ராசிபுரம் சட்டசபை தொகுதியில், போதமலை என்ற மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,600அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு இதுவரை ரோடு வசதி இல்லை. இதனால் வாகனங்கள் அந்த மலைப்பகுதிக்கு செல்ல முடியாது. போதமலையில், கீழூர் மலைவாழ் மக்கள் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் கெடமலை மலைவாழ்மக்கள் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 2 இடங்களில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழூரில் 845 வாக்காளர்களும், கெடமலையில் 297 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

நாளை 19ம் தேதி வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்குப்பதிவிற்கு தேவையான எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள், இன்று காலை ஆட்கள் மூலம் தலைச்சுமையாக அங்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. வாக்குச்சாவடி அதிகாரிகள், பாதுகாப்பிற்கான போலீசார் உள்ளிட்ட அனைவரும் சுமார் 12 கி.மீ. தூரம் நடத்து போதமலைக்குச் செல்கின்றனர். நாளை வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் கீழே கொண்டுவரப்படும்.

Tags:    

Similar News