பிளஸ் 2 தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் ஜன.25க்குள் மதிப்பெண் சான்றிதழ் பெற அறிவிப்பு

2018ம் ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை பெற வரும் ஜன.25ம் தேதி கடைசி நாளாகும்.

Update: 2021-12-01 02:15 GMT

பைல் படம்.

இதுகுறித்து, நாமக்கல் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் முதல், 2018ம் ஆண்டு செப்டம்பர் வரை, அனைத்து பருவங்களிலும், பிளஸ் 2 தேர்வு எழுதி, தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், தபால் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், திரும்பி வரப்பெற்ற அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாமக்கல் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்ததில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பழைய அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத் தாட்களாக மாற்றிடும் வகையில் கெஜட்டில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே இதுவரை, மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்கு இதுவே இறுதி வாய்ப்பாகும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மதிப்பெண் சான்றிதழை, நாமக்கல் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது தபால் மூலம் விண்ணப்பித்தோ பெற்றுக் கொள்ளலாம். நேரில் தேர்வு ஹால் டிக்கட், ஆதார் அட்டை அல்லது அடையாள அட்டை ஏதாவது ஒன்றை சமர்ப்பித்து 25.1.2022-க்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தபால் மூலம் பெறுவதற்கு ஹால் டிக்கட் நகல் அல்லது வெள்ளைத் தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு தேர்வெழுதிய பருவம், பிறந்ததேதி, பாடம் மற்றும் தேர்வுமையத்தின் பெயர் ஆகிய விவரங்களுடன் ஆதார் அட்டை நகல் இணைத்து, ரூ.45- க்கான தபால் ஸ்டாம்ப் ஒட்டப்பட்டப்பட்ட, சுய முகவரியிட்ட தபால் கவருடன், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி (தெற்கு) வளாகம், மோகனூர் ரோடு, நாமக்கல் 637 001 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News