நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் 25 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் 25 டன் காய்கறிகள், ரூ.7.38 லட்சம் மதிப்பில் விற்பனையானது.

Update: 2022-04-10 08:00 GMT

நாமக்கல் பார்க் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை இந்த உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்களை கொண்டுவந்த விற்பனை செய்வார்கள். ஏராளமான பொதுமக்கள் நேரடியாக காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் விற்பனை நடைபெறும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராம நவமி உற்சவம் என்பதால், வழக்கத்தைவிட காய்கறி விற்பனை அதிகம் நடைபெற்றது. மொத்தம் 22,350 கிலோ காய்கறிகளும், 3,400 கிலோ பழ வகைகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 750 கிலோ காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றது.

மொத்தம் 195 விவசாயிகள், 50க்கும் மேற்பட்ட வகையான காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 5,270 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ஒரு நாளில் மொத்த விற்பனை மதிப்பு ரூ.7,38,420 ஆகும்.

Tags:    

Similar News