நாமக்கல்: புதிய குடிநீர் திட்ப்பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ ராமலிங்கம் வலியுறுத்தல்

நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எம்எல்ஏ ராமலிங்கம் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Update: 2021-11-27 10:30 GMT

நாமக்கல் நகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்தல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டார்.

நாமக்கல் நகராட்சிப் பகுதிக்காக ஜேடர்பாளையத்தில் இருந்து ரூ.180 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நகராட்சிப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதிய குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து, நகராட்சி பகுதியில் தடையில்லாமல், சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மதியழகன், உதவி நிர்வாக பொறியாளர்கள் சங்கரன், வரதராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News