நாமக்கல் நகராட்சி 2வது சுற்று எண்ணிக்கையில் 6 வார்டுகளையும் திமுக அள்ளியது

நாமக்கல் நகராட்சி தேர்தலில் இதுவரை முடிவுகள் வெளியான 6 வார்டுகளையும் திமுக கைப்பற்றியது.

Update: 2022-02-22 05:30 GMT

நாமக்கல் நகராட்சி 1வது வார்டில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சத்தியவதிக்கு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நகராட்சி கமிஷனர் சுதா வழங்கினார்.

நாமக்கல் நகராட்சி தேர்தலில் இதுவரை முடிவுகள் வெளியான 6 வார்டுகளையும் திமுக கைப்பற்றியது.

நாமக்கல் நகராட்சிக்கு 37 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மையத்தில் எண்ணப்படுகின்றன. இதுவரை 2 சுற்றுக்களில் 1 முதல் 6வது வார்டு வரை ஓட்டுகள் எண்ணப்பட்டன, 6 வார்டுகளிலும், திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

1வது வார்டு - சத்தியவதி (திமுக)வெற்றி, 826 ஒட்டுகள், ஜெயப்பிரியா 605 (அதிமுக), வித்தியாசாம் 221 ஓட்டுகள்.

2வது வார்டு - சங்கீதா (திமுக)வெற்றி 1023 ஓட்டுகள், சித்ரா (அதிமுக) ஓட்டுகள் ஓட்டுகள், வித்தியாசம் 305 ஓட்டுகள்.

3வது வார்டு - பழனிசாமி (திமுக)வெற்றி 987 ஓட்டுகள், விமல்குமார் (அதிமுக) 381 ஓட்டுகள், வித்தியாசம் 606 ஒட்டுகள்

4வது வார்டு - சசிகலா (திமுக) வெற்றி 1398 ஓட்டுகள், யசோதா (அதிமுக) 778 ஓட்டுகள். வித்தியாசம் 620 ஓட்டுகள்.

5வது வார்டு - கிருஷ்மூர்த்தி (திமுக)வெற்றி 1207 ஓட்டுகள், சரவணன் (அதிமுக) 915 ஓட்டுகள். வித்தியாசம் 292 ஓட்டுகள்.

6வது வார்டு - மோகன் (திமுக) வெற்றி 823 ஓட்டுகள், சுரேஷ் (அதிமுக) 585 ஓட்டுகள். வித்தியாசம் 238 ஓட்டுகள்.

Tags:    

Similar News