நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூலை 26ல் தேனீ வளர்ப்பு பயிற்சி தொடக்கம்

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி வருகிற 26ம் தேதி துவங்குகிறது.

Update: 2021-07-13 12:30 GMT

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில்ப தேனீ வளர்ப்பு பயிற்சி வருகிற 26ம் தேதி துவங்குகிறது. இது குறித்து பயிற்சி மைய தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மாவட்ட வேளாண்துறை சார்பில் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சியாக தேனீவளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது. வருகிற ஜூலை 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இப்பயிற்சி நடைபெறும். 18 முதல் 45 வயது வரையுள்ள நாமக்கல் மாவட்ட விவசாயிகள்பயிற்சியில் கலந்துக்கொள்ளலாம்.

பயிற்சியில் தேனீ வளர்ப்பு முறைகள், தேனீக்களின் வகைகள், சிறப்பியல்புகள், பராமரிப்பு முறைகள், தேன் தரும் பயிர் ரகங்கள், மகரந்தம் தரும் பயிர்கள், தேனீக்களில் மழைக்கால பராமரிப்பு, தேனீக்களின் எதிரிகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த பாதுகாப்பு முறைகள் மற்றும் தேனின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் செயல்முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் 04286 266345, 266650 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News