நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் 10-ம் தேதி மாணவர் சேர்க்கை துவக்கம்

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 10-ம் தேதி மாணவர் சேர்க்கை துவங்கப்படுகிறது.

Update: 2022-08-03 07:15 GMT

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி பைல் படம்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், வரும் 10ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரில், 2022–23ம் ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கு (பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்ஸி) மாணவர் சேர்க்கை, வரும், 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. வரும், 10ம் தேதி, காலை 10 மணிக்கு, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., மாணவர்கள் ஆகியோருக்கு சிறப்பு சேர்க்கை நடக்கிறது. அதையடுத்து பிற பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் மொபைல் போன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. அழைப்புவிடுக்கப்பட்ட மாணவர்கள் நேரில் வந்து, உரிய துறையில் சேர்க்கை பெறலாம். நேரில் வரும்போது, மாற்றுச்சான்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் உண்மை சான்று, 5 நகல்கள் கொண்டு வரவேண்டும். மேலும் பெற்றோரையும் அழைத்து வரவேண்டும்.

கல்லூரியில் சேரும் மாணவர்கள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர் தரவரிசை பட்டியல் aagacnkl.edu.in என்ற கல்லூரி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பு வராத மாணவர்கள், துறைத்தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News