நாமக்கல்: விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்து விதைக்க ஆலோசனை

Farmer Meeting Today -நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தங்கள் விதைகளைப் பரிசோதனை செய்து விதைப்பு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-25 02:15 GMT

பைல் படம்.

Farmer Meeting Today - நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தங்கள் விதைகளைப் பரிசோதனை செய்து விதைப்பு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் விதைப்பரிசோணை நிலையவேளாண் அலுவலர் சரண்யா கூறியுள்ளதாவது:- விவசாயத்தில் மிக முக்கிய பங்குவகிக்கும் இடுபொருள் விதையாகும். அதிக மகசூல் பெற, தரமான விதை உபயோகிப்பது மிக முக்கியமாகும். தரமான விதை என்பது பாணீசோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட விதைகளாகும். உழவர்கள் தங்கள் விளை நிலங்களில் இருந்து பெறப்பட்ட தானிய வகை விதைகள், பயறு வகை விதைகள் மற்றும் எண்ணெய்வித்து போன்ற விதைகளை, விதைக்காக சேமிக்கும்பொழுது அதன் தரத்தினை அறிந்து சேமிக்க வேண்டும். விதையின் தரம் என்பது முளைப்புத்திறன் புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியவைகளாகும். இதற்கான பரிசோதனைகள் விதைப் பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. நாம் உபயோகிக்கும் விதைகளுக்கு பயிர் வாரியாக தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்ட விதைகளாக இருந்தாலும், விதைப்பதற்கு முன் தரப்பரிசோதனை செய்து விதைக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், தங்களிடமுள்ள விதைகளையும், விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளையும், உற்பத்தி செய்யும் உண்மை நிலை விதைகளையும், விதைப் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து தரமான விதைகளையே பயன்படுத்தவேண்டும். நாமக்கல் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில், குறைந்த கட்டணத்தில் ஒரு மாதிரிக்கு ரூ.80 வீதம் விதையின் புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் பிற ரக கலப்பு ஆகிய பரிசோதனைகளை செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News