வரும் 23ம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் 23ம் தேதி நடைபெறும் என ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-21 10:00 GMT

ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் 23ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 23ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் உடையவர் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நடவடிக்கை எடுத்த, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா உள்ளிட்டவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.

கூட்டத்தில் ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள், மாவட்டநிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News