வளையப்பட்டியில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க கொமதேக கோரிக்கை

வளையப்பட்டி பகுதியில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2021-08-19 02:30 GMT

பைல் படம்

வளையப்பட்டி பகுதியில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மோகனூர் கிழக்கு ஒன்றிய கொமதேக சார்பில், அதன் அமைப்பாளர் சிவகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

மோகனூர் தாலுக்கா வளையப்பட்டி பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவ்வாறு நடைபெறும்போது மோகனூர் போலீஸ் நிலையத்தில் தான் புகார் செய்ய வேண்டி உள்ளது. வளையப்பட்டி பகுதி மக்கள் மோகனூர் போலீஸ் நிலையம் செல்ல சுமார் 15 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.

இப்பகுதியில் பஸ் வசதி குறைவாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மோகனூர் செல்ல கால தாமதம் ஆகிறது. இதனால் வளையப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே வளையப்பட்டி பகுதியில் புதியபோலீஸ் நிலையம் அமைத்தால் இப்பகுதியில் குற்ற சம்பவங்கள் குறையும். எனவே வளையப்பட்டி பகுதியில் உடனடியாக தற்காலிக போலீஸ் நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News