நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பொதுமக்கள் உற்சாகத்துடன் வாக்களிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்.

Update: 2022-02-19 12:00 GMT

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த பொதுமக்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகாராட்சிகளில் உள்ள 151 வார்டுகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் உள்ள 288 வார்டுகள் உள்ளிட்ட 439 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும் முன்பே பல வாக்குச்சாவடிகளில், பொதுமக்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். வாக்குப்பதிவு துவங்கியது, முதலில் வாக்குச்சாவடிகளில் இருந்த வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு துவங்கப்பட்டது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர். கொரோனா விதிமுறைகளை அனுசரித்து வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டது. அனைவரும் காய்ச்சல் பரிசோதணை செய்யப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் விரல்களின் வைக்கப்படும் அடையாள மை அழிவதாக புகார்கள் வந்தன. அங்கு வேறு மை பாட்டில்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் அசம்பாவிதம் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Tags:    

Similar News