நாமக்கல் மாவட்டத்தில் இன்று 63 மையங்களில் தடுப்பூசி முகாம், 13,000 பேருக்கு போட இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 63 சிறப்பு மையங்களில், மொத்தம் 13,000 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-30 02:15 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 63 சிறப்பு மையங்களில் மொத்தம் 13,000 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று தடுப்பூசி போடப்படும் மையங்கள்விபரம்:

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: கோரையாறு, ஒண்டிக்கட்டை, சின்வரகூர், குல்லாண்டிகாடு அரசு தொடக்கப்பள்ளிகள்,

கொல்லிமலை வட்டாரம்: மங்கலம், மூலவளவு அரசு தொடக்கப்பள்ளிகள்.

சேந்தமங்கலம் வட்டாரம்: நாச்சிப்புதூர் தொடக்கப்பள்ளி, வாழவந்திக்கோம்பை உருது தொடக்கப்பள்ளி, சேந்தமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

எருமப்பட்டி வட்டாரம்: கோனங்கிப்பட்டி, பழையபாளையம் பஞ்சாயத்து அலுவலகங்கள், செல்லிபாளையம், வடவத்தூர் தொடக்கப்பள்ளிகள்.

மோகனூர் வட்டாரம்: நஞ்சை இடையார் பஞ்சாயத்து அலுவலகம், மல்லுமாச்சம்பட்டி, அணியாபுரம் தொடக்கப்பள்ளகிள்.

நாமக்கல் வட்டாரம்: பெருக்காம்பாளையம், ஆண்டிப்பட்டிபுதூர், வசந்தபுரம் தொடக்கப்பள்ளிகள், அய்யம்பாளையம் உயர்நிலைப்பள்ளி, நாமக்கல் கோட்டை பள்ளி, நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் (2வது தவனை தடுப்பூசி மட்டும்)

திருச்செங்கோடு வட்டாரம்: கருமகவுண்டம்பாளையம், அப்பூர்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் அரசு பள்ளிகள், எட்டிமலை ரோடு குமரன் தொடக்கப்பள்ளி, சந்தைப்பேட்டை சுகாதார மையம்.

பள்ளிபாளையம் வட்டாரம்: பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மரக்கால்காடு, குமராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் (திருநங்கையர் மட்டும்), பள்ளக்காபாளையம், நத்தமேடு அரசு தொடக்கப்பள்ளிகள்.

வெண்ணந்தூர் வட்டாரம்: அக்கரைப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், கரடியானூர் மினி கிளினிக், அண்ணா காலனி அங்கன்வாடி மையம், ஆலம்பட்டி பஞ்சாயத்து அலுவலகம்.

ராசிபுரம் வட்டாரம்: பிள்ளாநல்லூர் மேட்டுத்தெரு சுகாதார மையம், பட்டணம், சிங்களாந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளிகள், ராசிபுரம் சேந்தமங்கலம் பிரிவு சுகாதார மையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: மேற்கு பாலப்பட்டி, சோவாகவுண்டம்பாளையம், கோவிந்தம்பாளையம், இடையப்பட்டி அரசு தொடக்கப்பள்ளிகள்.

எலச்சிபாளையம் வட்டாரம்: செம்மன்காட்டுப்புதூர் சுகாதார மையம், ஆயுதகுட்டை, ஜமங்கமநாய்க்கன்பட்டி, ராயர்பாளையம் அரசு பள்ளிகள்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: சூரயகவுண்டம்பாளையம், பாலமேடுவிடுதி அரசு தொடக்கப்பள்ளிகள், அம்மன் கோவில் சுகாதார மையம், பருத்திப்பள்ளி அங்கன்வாடி மையம்.

பரமத்தி வட்டாரம்: கோலாரம், வீரணம்பாளையம், ராமதேவம், மாவுரெட்டி அரசு தொடக்கப்பள்ளிகள்.

கபிலர்மலை வட்டாரம்: சின்னசோளிபாளையம், எலந்தக்குட்டை, கொந்தளம் அரசு தொடக்கப்பள்ளிகள், பொத்தனூர் அங்கன்வாடி மையம்.

ஆகிய இடங்களில் கோவிஷீல்டுமுதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்படுகிறது.கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்படும். இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News