பக்ரீத்: நாமக்கல்லில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2021-07-21 04:52 GMT

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஈக்தா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில், திரளான இஸ்லாமியர் கலந்துகொண்டனர்.

முஸ்லீம்களின் தியாகத் திருநாளான, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் பேட்டை இஸ்லாமிய ஜாமியா பள்ளி வாசல் சார்பில், சிறப்புத் தொழுகை,  நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள ஈக்தா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி வாசல் முத்தவள்ளி தவுலத்கான் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இமாம் சாதிக் அஷ்ரத் நடத்திய சிறப்பு தொழுகையில் 1000-த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

கொரணா நோய்த்தொற்று அச்சம் காரணமாக சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து பங்கேற்றனர்.

இதேபோல், நாமக்கல் கோட்டையில் உள்ள திப்புசுல்தான் ஜாமிதயா மஸ்ஜித் உள்ளிட்ட, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானங்கள் என 60 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News