நாமக்கல் சட்டசபை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா

நாமக்கல் சட்டசபை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை ராஜேஷ்குமார் எம்.பி திறந்து வைத்தார்.

Update: 2021-11-19 10:00 GMT

நாமக்கல் சட்டசபை தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை, ராஜேஷ்குமார் எம்.பி திறந்த வைத்தார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள முல்லை நகரில், நாமக்கல் சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஆபீஸ் உள்ளது. இந்த ஆபீஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ ஆபீஸ் திறப்பு விழா நடைபெற்றது. எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பளார் ராஜேஷ்குமார் எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஆபீசை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, மாநில திமுக நிர்வாகிகள் நக்கீரன், ராணி, கைலாசம், மணிமாறன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசாமி, சரஸ்வதி, நகர பொறுப்பாளர்கள் சிவகுமார், பூபதி, ராணா ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலசுப்ரமணியம், கைலாசம், கவுதம், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் புதுச்சத்திரம் சாந்தி, மோகனூர் சரஸ்வதி, முன்னாள் கவுன்சிலர்கள் சரவணன், ஈஸ்வரன், மகளிரணி பூங்கோதை, ராணி, மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் குழந்தான், கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News