நாமக்கல் நகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கலந்து கொண்டு, எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2022-01-17 10:15 GMT

நாமக்கல் நகரில் மறைந்த முதல் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, நகர அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் நகராட்சித் துணைத் தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கொழந்தான் தெருவில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவிற்கு முன்னாள் நகர செயலாளர் ஆட்டோராஜா தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் எம்ஜிஆரின் உருவப்படத்திற் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நடிகர் சங்க செயலாளர் சுமதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News