அரசு சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள்: கலெக்டர் வழங்கல்

இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மருத்துவ உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-11-28 02:30 GMT

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மருத்துவ உபகரணங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மருத்துவ உபகரணங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களிடம் வழங்கினார்.

ரூ.2 லட்சம் மதிப்பிலான தெர்மல் ஸ்கேனர், ரத்த அழுத்தம் கண்டறியும் கருவி, பஸ்ஸ் ஆக்ஸி மீட்டர், டிராலி வண்டி, டிஜிட்டல் தெர்மா மீட்டர், கிளவுஸ், கட்டில், மெத்தை, தலையனை மற்றும் போர்வை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொல்லிமலை பவர்காடு மற்றும் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பிரபகரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன, ரெட்கிரால் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News