நாமக்கல் நகர தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா: மாஸ்க் வழங்கல்

நாமக்கல் நகர தமாகா சார்பில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.

Update: 2021-07-15 10:45 GMT

நாமக்கல் நகர தமாகா சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழாவில், மாவட்ட தலைவர் இளங்கோ, நகர தலைவர் சக்திவெங்கடேஷ் ஆகியோர், பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க்  வழங்கினர்.

நாமக்கல் நகர த.மா.கா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நகர தலைவர் சக்தி வெங்கடேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இளங்கோ,  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி, வட்டார தலைவர்கள் புதுச்சத்திரம் சின்னசாமி, எலச்சிபாளையம் சரவணன், நகர துணைத்தலைவர் கனகராஜ், அன்பழகன், சவரணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமாக தலைவர் வாசன், இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாளை கொரோனா விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளதால், கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News