நாமக்கல்லில் ஜாதி சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் காத்திருப்பு போராட்டம்

ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி இருளர் இன மக்கள் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்.

Update: 2021-12-29 01:15 GMT

ஜாதிச் சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு இருளர் இன மக்கள் தங்களது பள்ளிக்குழந்தைகளுடன் வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த் இருளர் இன மக்கள் ஜாதிச்சான்றிதழ் கேட்டு, பள்ளிக்குழுந்தைகளுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:- ராசிபுரம் தாலுக்கா ஆயில்பட்டி, கார்கூடல்பட்டி, மங்களபுரம் பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகிறோம். எங்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் சலுகைகளைப் பெற இருளர் பழங்குடி இன ஜாதிச் சான்றிதழ்கள் மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. குறிப்பாக 11, 12ம் வகுப்பு மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி நிலையங்களில் சேர்வது உள்ளிட்ட பல்வேறு அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஜாதி சான்றிதழ் அவசிய தேவையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறோர்.

இதுவரை ஜாதி சான்றிதழ் கிடைக்காதாதல் கல்வி உதவித்தொகை உள்பட அரசின் சலுகைகள் எதுவும் பெற முடியாத நிலை உள்ளது. பலர் தங்களின் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர். இம்முறை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிப்பதுடன், ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான முகாம் தேதியை மாவட்ட கலெக்டர் அறிவித்தால் மட்டுமே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து செல்வோம் என்று கூறி காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் கொல்லிமலையில் நடைபெற்ற முகாம் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால், மாலையில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனை சந்தித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் சில மனுதாரர்கள் மனு அளிக்க சென்றனர். அப்போது மனு அளிக்க சென்றவர்களை டிஆர்ஓ மரியாதை குறைவாக நடத்தியதாக கூறி, மனுதாரர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கண்ணன், சரவணன் ஆகியோர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இரவு 8 மணி வரை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டிஆர்ஓவை கண்டித்தும், சாதிச் சான்று வழங்கக்கோரியும் கோஷமிட்டனர்.

அங்கு வந்த நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் கூறியதையடுத்து சமரசம் அடைந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News