தீபாவளி பட்டாசுக் கடை அமைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

தீபாவளி பட்டாசு கடை அமைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-04 03:15 GMT

பைல் படம்.

தீபாவளி பட்டாசு கடை அமைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், விதிமுறைகளின் படி, ஆன்லைன் மூலம் மட்டுமே வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து பொது இ-சேவை மையங்களில், விண்ணப்பங்களை வெப்சைட் மூலம் அப்லோட் செய்யலாம். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் போட்டோ, ஆதார் கார்டு, பான் கார்டு, ரூ.500 கட்டணத்திற்கான கருவூல சலான், பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், கட்டிடத்தின் பட்டா அல்லது வாடகை ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி வரி மற்றும் கட்டணம் செலுத்திய ரசீது, கட்டிட வரைபடம் ஆகியவற்றுடன் வருகிற 30ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன் அதற்கான லைசென்சை ஆன்லைன்மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவேண்டும். விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையினை கொண்டாடிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News