சர்வதேச முட்டை தின விழா கொண்டாட்டம்: பொதுமக்களுக்கு இலவச முட்டை வழங்கல்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் நகரில் பொதுமக்களுக்கு 10 ஆயிரம் முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Update: 2022-10-14 07:45 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற சர்வதேச முட்டை தின விழாவில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ், பொதுமக்களுக்கு இலவச முட்டைகளை வழங்கினார்.

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் நகரில் பொதுமக்களுக்கு 10 ஆயிரம் முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நாமக்கல்லில் அமைந்துள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில், சர்வதேச முட்டை தின விழா, சங்க வளாகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களுக்கு இலவச அவித்த முட்டைகளை வழங்கிப் பேசியதாவது:

நாமக்கல் மண்டலத்தில் உள்ள, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 1000க்கும் மேற்பட்ட பண்ணைகளில், சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகள் ஏற்றுமதிக்கும் விநி÷ யாகம் செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கோழிப்பண்ணைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.

1996 ஆம் ஆண்டு வியன்னாவில் அக்டோபர் மாதம் உலக முட்டை தினம் கொண்டாடப்பட்ட்டது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. முட்டை எவ்வித கலப்படமும் செய்ய முடியாத, மிகவும் சத்தான, சுவையான, விலைõ மலிவான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். இதை குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சாப்பிடலமாம்.சர்க்கரை நோயாளிகள் முதல் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வரை அனைவருக்கும் இது சிறந்த உணவாகும். இது தற்போது பெரும்பாலான மக்களுக்கு உணவின் ஒரு பகுதியாக அமைந்து, ஒரு நாளில் மூன்று வேளையும் முட்டையை உட்கொள்கின்றனர். சைவ உணவு உட்கொள்பவர்களும் முட்டையை சாப்பிடலாம் என் று கூறினார்.

நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் அவித்த முட்டைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சங்க செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ, இணை செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் சசிகுமார், பண்ணையாளர்கள் துரை, ராணா ராஜேந்திரன், சுப்பிரமணியம், சின்னுசாமி, பிரபு, கோவிந்தராஜ், சங்கர், ரவி, செந்தில் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

* நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச முட்டை தினத்தை முன்னிட்டு, அம்மா உணவகத்தில் சாப்பிட வருகை தந்தவர்களுக்கு நாள் முழுவதுலம் இலவசமாக அவித்த முட்டைகள் வழங்கப்பட்டன. நாமக்கல் நகராட்சி அலுவலகத்தல் கமிஷனர் சுதா முன்னிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 6 கோழி முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Tags:    

Similar News