பழங்குடியின மாணவர்கள் மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்க அழைப்பு

உயர்கல்வி படிக்கும் பழங்குடியின மாணவர்கள் மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-11-18 12:00 GMT

பைல் படம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்கள் கல்வி தரத்தினை உயர்த்திடும் வகையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கான தேசிய கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷி"ப்) 246 நிறுவனங்களில் படிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த உயர் கல்வி படிக்கும் பழங்குடியின மாணவர்கள் 2020-21ஆம் கல்வியாண்டில் உயர்கல்விக்கான தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

அனைத்து இன்ஜினியரிங், தகவல் தொழில் நுட்ப கல்வி, அனைத்து முழுநேர டிப்ளமோ படிப்பு, கப்பல்துறை கட்டுமான ஒருங்கிணைந்த படிப்புகள், நிர்வாகம் சார்ந்த முழுநேர படிப்புகள், மருத்துவம் சார்ந்த படிப்புகள் (எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎம், எம்சிஎச்) முழுநேர இதர உயர்கல்வி படிப்புகள், ஹோட்டல் நிர்வாக படிப்பு, பி.எட் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பு படிக்கும் பழங்குடியின மாணவர்கள் தேசிய உதவித்தொகை திட்டத்தின் மூலம் பயனடைய விருப்பமுள்ளவர்கள் மத்திய அரசின் அமைச்சகத்தின் டிரைபல்.என்ஐசி.இன் என்ற இண்டர்நெட் முகவரியல் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட படிப்புகளை படிக்கும் பழங்குடியின் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் வருகிற 30ம் தேதி கடைசி நாளாகும். எனவே, தகுதியான பழங்குடியின மாணவர்கள் 30ம் தேதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை மேற்கண்ட இண்டர்நெட் முகவரியில் அப்லோட் செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News