இ-சேவை மையம் அமைக்க விரும்புகிறீர்களா? அப்ப இது உங்களுக்குத்தான்!

இ சேவை மையம் அமைக்க விரும்புவோர்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-06-18 06:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ- சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இத்திட்டத்தை பற்றி கூடுதல் தகவல் பெறவும், இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கவும், டிஎன்இசேவை.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் முகவரியை பயன்படுத்தலாம்.

இம்மாதம் 30ம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இசேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக்க கட்டணம் ரூ.3,000 மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6,000 ஆகும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி என்ற ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேசனை பயன்படுத்திக் காணலாம். அல்லது டிஎன்இஜிஏ.இன் என்ற வெப்சைட் முகவரியிலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News