மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் அரசு உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

மீன்வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் அரசு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Update: 2021-12-20 12:45 GMT

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் பல்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவின தொகை ரூ.7 லட்சத்தில், பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.2 லட்சத்து80 ஆயிரம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

மேலும் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மீன்வளர்ப்பு குளங்களில் மீன்வளர்ப்பு செய்திட ஏதுவாக, செலவினதொகைரூ.4 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படஉள்ளது.

பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டுமானியம் வழங்கிடும் திட்டத்தின் கீழ் ஆகும் மொத்தசெலவினதொகைரூ.14 லட்சத்தில் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படஉள்ளது.

நீரினை மறுசுழற்சி முறையில் சிறிய அளவிலான தொட்டிகள் அமைத்து நன்னீர் மீன் வளர்ப்புசெய்தல் திட்டத்தின் கீழ் ஆகும் மொத்தசெலவினதொகைரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் ரூ.3 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படஉள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மீன்வளர்ப்பில் ஈடுபடும், விவசாயிகள் இந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் மேட்டூர் அணையில் உள்ள, மீன்வளம் மற்றும் மீனவர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News