நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'இல்லம் தேடி' கல்வி கண்காட்சி

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கற்றல், கற்பித்தல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2022-02-26 12:15 GMT

நாமக்கல் ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறையின், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான, இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் கண்காட்சி நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மகளிர் மேல்நிலைப்பள்ளி, தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் போதுப்பட்டி குறுவள மையங்களுக்கு உட்பட்ட தன்னார்வலர்கள், இப்பயிற்சில் பங்கேற்றனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஈஸ்வரி தலைமை வகித்தார்.

பள்ளித் தலைமையாசிரியர் பார்வதி துவக்கி வைத்தார். தொடக்கநிலையில், 1 முதல், 5ஆம் வகுப்பு மாணவர், உயர் தொடக்கநிலையில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தயார் செய்யப்பட்ட கற்றல், கற்பித்தல் உபகரணங்களின் கண்காட்சி நடைபெற்றது. அதில், மாணவர்களுக்கு, கற்றல் கற்பித்தலை எளிதாக்கும் வகையில் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றன. ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், சசிகுமார், ஆசிரியர் பயிற்றுனர்கள் சசிராணி, கவிதா, பிரியதர்ஷினி, கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News