அரசு மருத்துவக்கல்லூரிக்கு ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணி துவக்கம்!

அரசு மருத்துவக்கல்லூரிக்கு ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணி துவக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-18 05:45 GMT

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் உமா, லோக்சபா எம்.பி. சின்ராஜ் ஆகியோர்.

அரசு மருத்துவக்கல்லூரிக்கு ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணி துவக்கம்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வழங்குவதற்காக, ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் குழாய்கள் அமைக்கும் பணியை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்பிபிஎஸ் படிப்புக்கு சேர்க்கை நடைபெற்று, வகுப்புகள் நடந்து வருகிறது.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வசதி இல்லாததால் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், முசிறி ஊராட்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர்உந்து நிலையத்திலிருந்து, நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் வழங்குவதற்காக இணைப்புக் குழாய் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துவக்க விழா மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி. சின்ராஜ் முன்னிலை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் குழாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

நாமக்கல் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்ட, முசிறி கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, நாள் ஒன்றுக்கு 14 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்திடும் வகையில் ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் 12.50 கி.மீ தொலைவிற்கு இணைப்பு குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்படும். நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் அகிலா பானு, உதவி பொறியாளர் முனியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News