நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளராக டாக்டர் ராமலிங்கம் வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதி பா.ஜ.க வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-25 11:15 GMT

நாமக்கல் லோக்சபா தொகதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அருகில் மாநில துணைத்தலைவர் துரைசாமி.

நாமக்கல் லோக்சபா தொகுதி பா.ஜ.க வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது மனுக்களை தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே நாமக்கல் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், நாமக்கல் நகர தலைவர் சரவணன், தமாகா மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, ஐஜேகே மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராஜா, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பொன்னுசாமி உள்ளிட்ட திரளான பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு வேட்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தாக்கல் செய்தார். பாஜக மாற்று வேட்பாளராக மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார் மனு தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News