கொரோனாவால் இறந்தவர் குடும்பத்தினர் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின், குடும்பத்தினர் தமிழக அரசின் நிவாரணத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Update: 2022-04-08 00:45 GMT

இது குறித்து கலெக்டர் ஸ்யோசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ அரசின் சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்றினால் இறந்ததற்கான இறப்புசான்று வைத்துள்ளவர்கள் அரசு இணையதளம் மூலமாகவும், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறி முறைகளின்படி விண்ணப்பிக்கலாம். 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள், அதாவது 18.5.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 20.3.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பநிட்ட காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி விண்ணப்பிக்க இயலாதவர்கள், அதுகுறித்து டிஆர்ஓவிடம் முறையீடு செய்யலாம். அவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை, தகுதியின் அடிப்படையில் டிஆர்ஓ தலைமையிலான குழு பரீசிலனை செய்து தீர்வு செய்யும். கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் விண்ணப்பித்து நிவாரணம் பெறலாம். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,401 குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் கடந்த 7.12.2022 முதல் 15.3.2022 வரை ரூ.7 கோடியே 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News