நாமக்கல்லில் புதியதாக 6 பேருக்கு கொரோனா தொற்று: கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல்லில் புதியதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-06-27 13:00 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி புதியதாக 6பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அனைவரும் தறாமல் தடுப்பூசி போட்டக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக கடந்த 26ம் தேதி 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில்

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும், உயிரிழப்போ கடுமையான பாதிப்போ ஏற்படுத்துவதில்லை. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொது மக்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளவேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மெத்தமுள்ள, 15,15,000 நபர்களில், 12,84,532 நபர்களுக்கு (84.79%) முதல் தவணை தடுப்பூசியும், 10,25,473 (67.69%) நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News