இந்திய அரசியலமைப்பு தினம்: நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2021-11-26 11:30 GMT

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

நாமக்கல்லில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு (நவ.26- கான்ஸ்டிட்யூசன் டே) சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சார்பு நீதிபதி வித்யா வரவேற்றார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன், மாவட்ட குடும்ப நல கோர்ட் நீதிபதி பாலசுப்ரமணியம், கூடுதல் சார்பு நீதிபதி முருகன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.

நிகழ்ச்சியை முன்னிட்டு, சுமார் 90க்கு மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள், வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.

Tags:    

Similar News