தபால் அலுவலகங்களில் விரைவில் இண்டர்நெட் பேங்கிங் சேவை துவக்கம்

நாடு முழுவதும் தபால் அலுவலகங்களில் இண்டர்நெட் வசதியுடன் கூடிய வங்கி சேவை விரைவில் துவக்கப்படவுள்ளது.

Update: 2022-02-28 09:45 GMT

பைல் படம்.

தபால் அலுவலகங்களில் இண்டர்நெட் வசதியுடன் கூடிய வங்கி சேவை துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவிக்கையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நாட்டில் உள்ள 1.50 லட்சம் தபால் அலுவலகங்கள் இண்டர்நெட் மூலம் இணைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் அனைத்து தபால் அலுவலகங்களிலும் இண்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கன் மிகுந்த பயனடையலாம். எனவே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கைத் துவங்கி எளிய முறையில் பணப்பரிவர்த்தனை செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News