நாமக்கல் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கோலம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டது.

Update: 2022-07-20 11:15 GMT

நாமக்கல் மாவடத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி முதல் ஆகஸ்டு10ம் தேதி வரை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க நாமக்கல் மாவட்டத்தில், இப்போட்டிக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி நேற்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மகளிர் குழுக்கள் மூலம் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டன. திரளான பொதுமக்கள் இந்த கோலங்களைப் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News