பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து நாமக்கல்லில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து நாமக்கல்லில் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-18 09:15 GMT

பெரியார் பல்கலைக்கழகத்தை கண்டித்து நாமக்கல்லில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சமீபத்தில் நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில், வழங்கப்பட்ட வினாத்தாளில் சாதி சம்மந்தமான சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றுள்ளது. இதைக்கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

தலைமை பட்டியல் அணி மாவட்ட தலைவர் சுரேஷ், மாநில நிர்வாகி ராம்குமார், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கவிதா , மாவட்ட பொதுச் செயலாளர்கள் மகேஷ், வடிவேல், சத்யாபாணு, சேதுராமன், துணைத் தலைவர்கள் முத்துக்குமார், வக்கீல் சந்திரசேகரன், மகேஷ்வரன், ரவிகுமார், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News