இரண்டாவது அலை தீவிரம்: கவனமாக இருங்க

கொரோனா இரண்டாவது இரண்டாவது அலையில் சிறுவர்கள் மற்றும் இளம் வயதுடையோர் அதிகளவில் பாதிக்கப்பட்டுவதால் கவனம் தேவை

Update: 2021-05-09 14:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் முதலே இரண்டாவது கொரோனா தொற்றுஅதிவேகமாக பரவி வந்தாலும், ஓரிரு உயிர்பலி மட்டுமே இருந்து வந்தது. ஆனால் நடப்பு மாதம் தொடக்கம் முதலே  தொற்று பரவும் வேகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் உயிர்ப்பலி அதிக அளவில் ஏற்பட்டு வருவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறை அறிவிப்பின்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களில் 8 பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள்.

இறந்தவர்களில் 8 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர், இரண்டு பேர் 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இறந்த அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் முதியவர்கள் மிகவும் எச்சரிக்க வேண்டும் செயல்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை 2295 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை முடிந்த ஒரு வாரத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் 71 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 13 வயது முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் 1,008 பேரும், 40 முதல் 60 வயதுக்குட்பட்ட 257 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 350 பேரும் என மொத்தம் ஒரே வாரத்தில் 2295 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் முதல் அலையில் சிறுவர் சிறுமிகள் மிகக் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இரண்டாவது அலையில் சிறுவர் சிறுமிகள் மற்றும் இளம் வயதுடையோர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொற்றினை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அவசியம் வழங்க வேண்டுமெனவும் அனைவரும் முகக்கவசம் அணியவும், கைகழுவுதல் சுகாதாரமாக இருப்பது சமூகப் இடைவெளியுடன் கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கடைபிடித்தாலே தொற்று நோயை விரைந்து ஒழித்துவிடலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Tags:    

Similar News