நாமக்கல்லில் ஊர்க்காவல் படை பெண் பணியாளர் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல்லில் முன் விரோதம் காரணமாக பொய் வழக்கு கொடுத்ததால், மனமுடைந்த ஊர்கால்படை பணியாளர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

Update: 2022-04-07 05:00 GMT

பைல் படம்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, எம்.ஜி.ஆர் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பேபி (எ) சசிகலா (35) ஊரர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். அவர், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாமக்கல் நகராட்சி 13-வது வார்டில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்திக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு, தனது மொபட்டில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் சென்ற சசிகலா, திடீரென பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, நகராட்சி தேர்தல் முன்விரோதத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, தன் மீது பொய்யான புகார்களை போலீசில் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக அவர் கூறினார். 

Tags:    

Similar News