கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா

கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2022-05-12 10:45 GMT

கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களை வாழ்த்தி மேடை பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார்.

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், இறுதியாண்டு படிக்கும் அனைத்து துறை மாணவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டி.சிஎ.ஸ். போன்ற 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆண்டிற்கு ரூ.4 லட்சம் முதல் 12 லட்சம் வரை சம்பளம் பெறும் வகையில், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெற்ற 1107 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கும் விழா, கல்லூரி சேர்மன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

மேடைப்பேச்சாளர் பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பணிநியமன உத்தரவுகளை வழங்கி பாராட்டினார். இதில்  சி.எஸ்.இ, இ.சி.இ, மெக்கானிக்கல் மற்றும் ஐ.டி துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரபல கம்பெனிகளில் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரி முதல்வர் முதல்வர் அசோகன், வேலைவாய்ப்புத் துறை தலைவர் ஸ்ரீதர், டெக்னிக்கல் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News