நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் 54 பேருக்கு பணி நியமன உத்தரவு

நாமக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில், 54 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

Update: 2021-11-21 11:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சிணாமூர்த்தி, அரசின் திட்டங்கள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் அல்லாமல், பிற மாவட்டங்களில் இருந்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க, 24 தனியார் துறை நிறுவனங்கள், 8 திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டன. 5 முதல், பிளஸ் 2 வரை பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகள் என மாவட்டம் முழுவதும் இருந்து, 146 பேர் கலந்து கொண்டனர்.

54 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது. மேலும், 42 பேர் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு திறன் பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராசாத்தி, சித்த மருத்துவர் பூபதிராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News