நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு முன்பதிவு துவக்கம்

நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

Update: 2021-11-29 11:00 GMT

கோப்பு படம் 

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில் கம்பீர தோற்றத்தில் ஆஞ்சநேயர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ் மாதம் முதல் ஞாயிறுக்கிழமை, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்புகள், அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு தங்கம், வெள்ளி, முத்தங்கி, வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் பக்தர்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் குளிர் காலங்களான கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற விரும்பினால் ஒருநபருக்கு ரூ.15 ஆயிரம் கட்டணமாக செலுத்தி தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த ஆண்டின் முதல், வெண்ணெய் காப்பு அலங்காரம் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு செய்யப்படுகிறது. வெண்ணை காப்பு அலங்காரம் சுவாமிக்கு செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

Tags:    

Similar News